கொலைவழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலைவழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 March 2022 7:32 PM IST (Updated: 4 March 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
 தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரி அருகே கடந்த 7.2.2022 அன்று ஜார்கண்ட் மாநிலம் விஜயகிரி பகுதியை சேர்ந்த நிமியா முண்டா மகன் நமன்முண்டா (40) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில்  தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த சேர்மதுரை மகன் செல்லகண்ணன் (20), புத்திரசிகாமணி மகன் மொட்டைசாமி (30) உள்ளிட்ட 3 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேரும் தற்போது பாளையங்கோட்டை ஜெயலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம்
இதை தொடர்ந்து செல்லகண்ணன் மற்றும் மொட்டைசாமி ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செல்லகண்ணன், மொட்டைசாமி ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் பாளையங்கோட்டை ஜெயில் வழங்கினார்.

Next Story