திருப்பாலைவனம் கிராமத்தில் 10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


திருப்பாலைவனம் கிராமத்தில் 10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
x
தினத்தந்தி 4 March 2022 7:43 PM IST (Updated: 4 March 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

திருப்பாலைவனம் கிராமத்தில் 10 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் உவர்ப்பு நீர் கலந்த குடிநீரை பொதுமக்கள் குடித்து வந்தனர். இந்த நிலையில் ஊராட்சியில் சமுதாய வளர்ச்சி நிதி மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதன் பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி முன்னிலை வகித்தார். திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் அனைவரையும் வரவேற்றார். பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்தார்.

Next Story