தேர்தலை புறக்கணித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்
ஊட்டி நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் வாணீஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
ஊட்டி
ஊட்டி நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் வாணீஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
மறைமுக தேர்தல்
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 20 வார்டுகளில் தி.மு.க., 6 வார்டுகளில் காங்கிரஸ், 7 வார்டுகளில் அ.தி.மு.க., 3 வார்டுகளில் சுயேச்சை வெற்றி பெற்றது. இதில் சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேரும் தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்தது.
இந்தநிலையில் ஊட்டி நகராட்சியில் உள்ள நகர்மன்ற கூட்டரங்கில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திராஜ் நடத்தினார்.
நகராட்சி தலைவர்
தி.மு.க. சார்பில் 21-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.வாணீஸ்வரி, தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஒருமனதாக ஊட்டி நகராட்சி தலைவராக வாணீஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாக தேர்வான நகராட்சி தலைவரை இருக்கையில் அமர வைத்து ஆணையாளர் காந்திராஜ் பூங்கொத்து, சால்வை வழங்கினார். பின்னர் வாணீஸ்வரி கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஊட்டியில் 25-வது நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துணைத்தலைவர்
இதையடுத்து நகராட்சி துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கு 22-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த ரவிக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
Related Tags :
Next Story