தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பரிமளா வெற்றி


தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பரிமளா வெற்றி
x
தினத்தந்தி 4 March 2022 9:11 PM IST (Updated: 4 March 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பரிமளா வெற்றி பெற்றார். ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்

கூடலூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பரிமளா வெற்றி பெற்றார். ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. கூட்டணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 11 வார்டுகளிலும், சுயேச்சை 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. மேலும் அ.தி.மு.க., முஸ்லிம் லீக், மா.கம்யூ. தலா ஒரு வார்டுகளை கைப்பற்றியது. பெரும்பான்மை வார்டுளை கைப்பற்றியதால் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க. கூட்டணி பிடிப்பது உறுதியானது.

வேட்புமனு தாக்கல்

இந்தநிலையில்நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 17-வது வார்டு கவுன்சிலர் வெண்ணிலா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் சிவராஜ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பரிமளா வெற்றி

இதற்கிடையில் தி.மு.க. வேட்பாளர் வெண்ணிலாவை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த 12-வது வார்டு கவுன்சிலர் பரிமளா நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஆணையாளரும், தேர்தல் அலுவலருமான ராஜேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. 

இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டு வாக்களித்தனர். பின்னர் கவுன்சிலர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் 11 வாக்குகள் பெற்று பரிமளா வெற்றி பெற்றார். 

துணைத்தலைவர் தேர்தலிலும் போட்டி

இதற்கிடையில்  துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்த வேட்பாளரும், 1-வது வார்டு கவுன்சிலருமான சிவராஜ் அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த 10-வது வார்டு கவுன்சிலர் உஸ்மான் களம் இறங்கினார். 

அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனார். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் 17 வாக்குகள் பெற்று சிவராஜ் வெற்றி பெற்றார். மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு சான்றிதழ்களை தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரன் வழங்கினார்.


Next Story