தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பங்கஜம் வெற்றி
ஜெகதளா பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பங்கஜம் வெற்றி பெற்றார். அதில் ஒரே கட்சியை சேர்ந்த 3 பேர் களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்
ஜெகதளா பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பங்கஜம் வெற்றி பெற்றார். அதில் ஒரே கட்சியை சேர்ந்த 3 பேர் களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே கட்சியில் 3 வேட்பாளர்கள்
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளில் தி.மு.க., 4 வார்டுகளில் அ.தி.மு.க., 2 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளரும், 11-வது வார்டு கவுன்சிலருமான பிரமிளா போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த 7-வது வார்டு கவுன்சிலர் யசோதா, 13-வது வார்டு கவுன்சிலர் பங்கஜம் ஆகியோர் போட்டியிட்டனர். இதையடுத்து நடந்த தேர்தலில் 8 வாக்குகள் பெற்று பங்கஜம் வெற்றி பெற்றார். அவருக்கு செயல் அலுவலர் சதாசிவம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆதரவாளர்கள் கோஷம்
இதற்கிடையில் கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர் பிரமிளா தோல்வியடைந்த விரக்தியில் அவரது ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயசங்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் சஜீவன் களம் இறங்கினார். இதில் ஜெயசங்கர் வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story