பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
முகூர்த்தநாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் தரிசனம் செய்ய பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம், மாத கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அதன்படி நேற்று முகூர்த்தநாள் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் காணப்பட்டது. குறிப்பாக அடிவாரம், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். அதேபோல் திருஆவினன்குடி கோவிலில் திருமணம் செய்த புதுமண தம்பதிகள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story