தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி, 19 பேரூராட்சி தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி மற்றும் 19 பேரூராட்சி தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க., தி.மு.க., சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு பேரூராட்சி தலைவர் பதவியில் வெற்றி பெற்றனர்.
தேனி:
நகராட்சி தலைவர்கள்
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மொத்தம் 513 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளனர். இந்த நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.
6 நகராட்சி தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. சின்னமனூர் நகராட்சியில் மட்டும் ஓட்டுப்பதிவு மூலம் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். மற்ற 5 நகராட்சிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
அதன்படி தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக ரேணுப்பிரியா, பெரியகுளம் நகராட்சி தலைவராக சுமிதா, போடி நகராட்சி தலைவராக ராஜராஜேஸ்வரி, சின்னமனூர் நகராட்சி தலைவராக அய்யம்மாள், கம்பம் நகராட்சி தலைவராக வனிதா நெப்போலியன், கூடலூர் நகராட்சி தலைவராக பத்மாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் நகராட்சி தலைவர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
பேரூராட்சி தலைவர்கள்
அதுபோல், மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் 19 பேரூராட்சி தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் பதவியை அ.ம.மு.க.வும், போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க.வும் கைப்பற்றியது. வடுகப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சை தேர்வு செய்யப்பட்டார்.
பூதிப்புரம், அனுமந்தன்பட்டி, ஹைவேவிஸ், குச்சனூர், ஓடைப்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய 6 பேரூராட்சி தலைவர்கள் ஓட்டுப்பதிவு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற 16 பேரூராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் பேரூராட்சி தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் கட்சியின் பெயர்) வருமாறு:-
ஆண்டிப்பட்டி-சந்திரகலா (தி.மு.க.), பூதிப்புரம்-கவியரசு (தி.மு.க.), தேவதானப்பட்டி-முருகேஸ்வரி (தி.மு.க.), கெங்குவார்பட்டி-தமிழ்ச்செல்வி (தி.மு.க.), அனுமந்தன்பட்டி-ராஜேந்திரன் (தி.மு.க.), ஹைவேவிஸ்-இங்கர்சால் (தி.மு.க.), காமயகவுண்டன்பட்டி-வேல்முருகன் (தி.மு.க.), கோம்பை-மோகன்ராஜா (தி.மு.க.), குச்சனூர்-ரவிச்சந்திரன் (தி.மு.க.).
மார்க்கையன்கோட்டை-முருகன் (தி.மு.க.), மேலச்சொக்கநாதபுரம்-கண்ணன் காளிராமசாமி (தி.மு.க.), ஓடைப்பட்டி-தனுஷ்கோடி (தி.மு.க.), பண்ணைப்புரம்-லட்சுமி (தி.மு.க.), க.புதுப்பட்டி-சுந்தரி (தி.மு.க.), தாமரைக்குளம்-பால்பாண்டி (தி.மு.க.), தென்கரை-நாகராஜ் (தி.மு.க.), தேவாரம்-லட்சுமி (தி.மு.க.), உத்தமபாளையம்-முகமது அப்துல் காசிம் (தி.மு.க.), வீரபாண்டி-கீதா (தி.மு.க.), போ.மீனாட்சிபுரம்-திருப்பதி (அ.தி.மு.க.), பழனிசெட்டிபட்டி-மிதுன்சக்கரவர்த்தி (அ.ம.மு.க.), வடுகப்பட்டி-நடேசன் (சுயேச்சை) ஆகியோர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.
Related Tags :
Next Story