தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான மின்கம்பம்
மயிலாடுதுறை மாவட்டம் கங்கணம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜின்னாத் தெருவின் மையப்பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், மயிலாடுதுறை.
கைப்பம்பு சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறை மீன் மார்கெட் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு குழந்தைகளின் வசதிக்காக கைப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கைப்பம்பு சேதமடைந்ததால் தண்ணீர் வருவதில்லை. இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தண்ணீரின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கைப்பம்பை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தோப்புத்துறை.
Related Tags :
Next Story