ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் ராம்ராஜ் வெற்றி
நீடாமங்கலம் பரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க.வேட்பாளர் ராம்ராஜ் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க.வேட்பாளர் ராம்ராஜ் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம் பேரூராட்சி
நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகர் தேர்தலை நடத்தினார்.
தலைவர் பதவிக்காக தி.மு.க. 8-வது வார்டு உறுப்பினர் ராம்ராஜ், 9-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டது.
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
பின்னர் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ராம்ராஜ் 8 வாக்குகள் பெற்றார். பரிமளா செந்தமிழ்ச்செல்வன் 7 வாக்குகள் பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ராம்ராஜ் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். தேர்தல் அதிகாரியின் இந்த முடிவு சரியல்ல. 3 வாக்குகள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது என பரிமளா செந்தமிழ்ச்செல்வன் முறையிட்டார். இதனை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்தார்.
அ.தி.மு.க.வினர் சாலைமறியல்
தேர்தல் முடிவை கண்டித்து நீடாமங்கலத்தில் அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story