கொல்லிமலையில் மரத்தில் தொங்கிய ஆண் பிணம் தற்கொலையா? கொலையா? போலீசார் விசாரணை


கொல்லிமலையில் மரத்தில் தொங்கிய ஆண் பிணம் தற்கொலையா? கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 March 2022 11:12 PM IST (Updated: 4 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் மரத்தில் தொங்கிய ஆண் பிணம் தற்கொலையா? கொலையா? போலீசார் விசாரணை

சேந்தமங்கலம்:
கொல்லிமலை நுழைவுவாயில் கிராமமாக திகழும் சோளக்காடு பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான மூலிகை பண்ணை உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம்போல் வனக்காப்பாளர் சரவணப்பெருமாள் ரோந்து சென்று கண்காணித்தார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் சுமார் 35 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனடியாக இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு, கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசிலும் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மரத்தில் தொங்கிய ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். 
 மரம் அருகில் ஒரு கைப்பை விரிக்கப்பட்ட நிலையில் ஒரு துண்டு மற்றும் உடை செம்மண் நிறத்தில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக இங்கு வந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். சோளக்காடு பகுதியில் ஆண் பிணம் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story