தி.மு.க. வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்த போட்டி வேட்பாளர்
கீழ்வேளூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் போட்டி வேட்பாளர் தோற்கடித்தார். போதுமான உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் போட்டி வேட்பாளர் தோற்கடித்தார். போதுமான உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
மறைமுக தேர்தல்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. 8 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. 2 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கடந்த 2-ந்தேதி பதவி ஏற்று கொண்டனர். இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
போட்டி வேட்பாளர் வெற்றி
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட 11-வது வார்டு உறுப்பினர் ராசாத்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து 15-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் இந்திராகாந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் மறைமுக தேர்தலை நடத்தினார்.இதில் போட்டி வேட்பாளர் இந்திராகாந்தி 8 வாக்குகளையும், தி.மு.க. தலைமை அறிவித்த ராசாத்தி 7 ஓட்டுகளையும் பெற்றனர். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் போட்டி வேட்பாளர் இந்திராகாந்தி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றார்.
துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு
பின்னர் மாலையில் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் 15 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் கலந்து கொள்ள வந்தனர். மீதி 9 பேர் வரவில்லை. பெரும்பான்மையான 8 உறுப்பினர்கள் தேர்தலில் கலந்து கொள்ளாததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தம் அலுவலர் சரவணன் அறிவித்தார்.
மேலும் பேரூராட்சி துணைத்தலைவர் மறு தேர்தல் நடைபெறும் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றார்.
Related Tags :
Next Story