தலைவர்-துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு


தலைவர்-துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 5 March 2022 12:16 AM IST (Updated: 5 March 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் நகர்மன்ற தலைவர்-துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வேதாரண்யம்:
 வேதாரண்யம் நகர்மன்ற தலைவர்-துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
21 வார்டுகள்
 வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதை தொடர்ந்்து 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தி.மு.க. 18 இடங்களிலும், இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும், அ.தி.மு.க. 1 இடத்திலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்று இருந்தன. இதை தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் கடந்த 2-ந்தேதி கவுன்சிலர்களாக பதவி ஏற்று கொண்டனர். 
தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
இதையடுத்து நகர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவருக்காக தேர்தல் நேற்று காலை நடந்தது. இதில் தி.மு.க.சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மா.மீ.புகழேந்தியும்,  துணை தலைவர் பதவிக்கு தி.மு..க சார்பில் போட்டியிட்ட மங்களநாயகி  போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டனர். 
2 பேருக்கும் நகராட்சி ஆணையர் ஹேமலதா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு மற்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story