நாகை நகர் மன்ற தலைவர்-துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
நாகை நகர் மன்ற தலைவர்-துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். உடனடியாக அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை நகர் மன்ற தலைவர்-துணை தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். உடனடியாக அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தல்
நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்தது. இதில் 16-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 35 வார்டுகளுக்கான தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடந்தது.
இதில் தி.மு.க. 24 வார்டுகளிலும். இதன் கூட்டணி கட்சிகள் 4 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் நகர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல், நாகை நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.இதையடுத்து நகராட்சி தலைவர் பதவிக்கு 30-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க. கவுன்சிலர் மாரிமுத்து தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீதேவியிடம் தாக்கல் செய்தார்.
தலைவர் போட்டியின்றி தேர்வு
அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி, கவுன்சிலர் மாரிமுத்து நகர் மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து நகராட்சியில் உள்ள தலைவர் அலுவலகத்தை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோருடன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நகராட்சி தலைவராக மாரிமுத்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அனைத்து கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல துணை தலைவராக 5-வது வார்ட்டில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுகொண்டார்.
Related Tags :
Next Story