குடியாத்தம் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சவுந்தரராஜன் வெற்றி


குடியாத்தம் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சவுந்தரராஜன் வெற்றி
x
தினத்தந்தி 5 March 2022 12:42 AM IST (Updated: 5 March 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சவுந்தரராஜன் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பூங்கொடி மூர்த்தி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.

குடியாத்தம்

குடியாத்தம் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சவுந்தரராஜன் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பூங்கொடி மூர்த்தி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.

சவுந்தரராஜன் வெற்றி

குடியாத்தம் நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 21 தி.மு.க. 21 உறுப்பினர்களும், கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. சார்பில் 10  உறுப்பினர்களும், பா.ஜ.க. சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் இருவரும் வெற்றி பெற்றிருந்தனர்.

குடியாத்தம் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் 12-வது வார்டில் வெற்றி பெற்ற நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.சவுந்தரராஜன் அறிவிக்கப்பட்டிருந்தார். 

நேற்று காலை குடியாத்தம் நகராட்சி தலைவருக்கான தேர்தல் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் எஸ்.சவுந்தர்ராஜனும், அ.தி.மு.க. சார்பில்  ராணிபாஸ்கரும் போட்டியிட்டனர். இதில் 24 வாக்குகள் பெற்று சவுந்தரராஜன் வெற்றி பெற்றார். 
வெற்றி பெற்ற எஸ்.சவுந்தரராஜனுக்கு நகராட்சி ஆணையாளர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்‌‌. தொடர்ந்து நகராட்சி உறுப்பினர்களும், தி.மு.க. பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

குலுக்கல் முறையில் அ.தி.மு.க. வெற்றி

மதியம் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரசை ேசர்ந்த கே.விஜயனும்,. அ.தி.மு.க. சார்பில் 24- வது வார்டில் வெற்றி பெற்ற பூங்கொடி மூர்த்தியும் போட்டியிட்டனர். இதில் இருவரும் தலா 18 வாக்குகள் பெற்று சமநிைல ஏற்பட்டது.  இதனைத்தொடர்ந்து குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பூங்கொடி மூர்த்தி வெற்றி பெற்றார். 
இதையடுத்து அவருக்கு நகராட்சி உறுப்பினர்கள், அ.தி.மு.க.வினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க. கூட்டணிக்கு 24 பேர் இருந்தனர். ஆனால் விஜயனுக்கு 18 வாக்குகளே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வில் இணைந்தார்

முன்னதாக குடியாத்தம் 6-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முஷீராஇர்பான் நேற்று காலை  தி.மு.க. நகர பொறுப்பாளர் சவுந்தரராஜன் தலைமையில் வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார், அமலுவிஜயன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் முன்னிலையில்  தி.மு.க.வில் இணைந்தார். 

Next Story