வங்கி கணக்கில் இருந்து மாயமான பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
வங்கி கணக்கில் இருந்து மாயமான பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம்,
திண்டிவனம் ஊரல் பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன் (வயது 35). இவர் தனியார் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கி கணக்கில் இருந்து கடந்த 3.10.2021 அன்று ரூ.49 ஆயிரத்தை யாரோ மர்ம நபர்கள் எடுத்து விட்டதாக அய்யனாரப்பன், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிசங்கர், அசாருதீன், ராஜசேகர் ஆகியோர் விசாரணை செய்ததில் வங்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேறொருவரின் கணக்கில் பணம் அனுப்பப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அத்தொகையான ரூ.49 ஆயிரம் மீட்கப்பட்டு அய்யனாரப்பனுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story