அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
நாகூர் வெட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகூர்:
நாகை சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நாகூர் பட்டினச்சேரி அருகே நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது வெட்டாற்றில் டிராக்டரில் 2 பேர் மணல் அள்ளி கொண்டு இருந்தனர்.அங்கு அதிகாரிகள் சென்ற போது மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு வந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய 2 பேரும் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story