பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
தேசூர் தேரடி வீதியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தில் பா.ஜ.க. கொடியை யாரோ அகற்றி விட்டனர். பா.ஜ.க. கொடியை அகற்றிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசூர் பேரூராட்சி தேரடிவீதியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. ஒன்றிய தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகி திருமலை, சிங்கம்பூண்டி கிராம கிளை கழக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சங்கர், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் நித்தியானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்சி கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கண்டன கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story