ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக போட்டி வேட்பாளர் மனு தாக்கல் செய்த நிலையில் தேர்தல் ஒத்திவைப்பு


ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக போட்டி வேட்பாளர் மனு தாக்கல் செய்த நிலையில் தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 5 March 2022 1:09 AM IST (Updated: 5 March 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் நகர்மன்ற தேர்தலின்போது தி.மு.க.அறிவித்த வேட்பாளருக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்த மற்றொருவர் போட்டிவேட்பாளராக மனுதாக்கல் செய்த நிலையில் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை கண்டித்து தர்ணா நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்

ஆம்பூர் நகர்மன்ற தேர்தலின்போது தி.மு.க.அறிவித்த வேட்பாளருக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்த மற்றொருவர் போட்டிவேட்பாளராக மனுதாக்கல் செய்த நிலையில் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை கண்டித்து தர்ணா நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பதவியேற்பு விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தி.மு.க.24 வார்டுகளிலும், 5 வார்டுகளில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க., காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்தன. 5 சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று ஆம்பூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க., சுயேச்சைகள் என 21 நகரமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் 15 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்ள வராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 2 சுயேச்சை வார்டு உறுப்பினர்கள் பிற்பகலில் தனித்தனியாக வந்து ஆணையாளர் அலுவலகத்தில் பதவியேற்று கொண்டனர். மீதமுள்ள 10 நகரமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆணையாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

எம்.பி., எம்.எல்.ஏ. வருகை

அப்பொழுது நகராட்சிக்கு கதிர் ஆனந்த் எம்.பி., வில்வநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளே வந்தனர். இதனைக் கண்ட தி.மு.க. மற்றும் மற்ற கட்சியினர் அவர்களை வெளியேற்றுமாறு கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 இதை தொடர்ந்து அதிகாரிகள் அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பினர். 
பின்னர் நகராட்சியில் மறைமுக தேர்தல் தொடங்கியது. இதில்1-வது வார்டு உறுப்பினர் ஓட்டு போட்டு இருந்த நிலையில் தி.மு.க. தலைமையில் அறிவிக்கப்பட்ட 16-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏஜாஸ் அஹமத் தேர்தல் நடத்தக்கூடாது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போட்டி வேட்பாளர் ஏஜாஸ் அஹமத் தேர்தல் நடத்தக்கூடாது என வாக்கு பெட்டியை தூக்கி வீசினார்.

அதே நேரத்தில் தலைமை அறிவித்த தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து மனுதாக்கல் செய்த அதே கட்சிைய சேர்ந்த போட்டி வேட்பாளர் ஷபீர் அஹமதுவுக்கு ஆதரவாக பல நகரமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் பல கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு 26 கவுன்சிலர்கள் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை மனுவை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலா மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்து தேர்தலை மறு தேதி அறிவிக்கும் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

தரையில் அமர்ந்து தர்ணா

இதனை கண்டித்தும், தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் நகராட்சி வளாகத்தின் வெளியே  பல்வேறு கட்சியினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து வந்த வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 
இச்சம்பவத்தால் ஆம்பூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story