வாணியம்பாடி நகராட்சி தலைவராக உமா சிவாஜி கணேசன் போட்டியின்றி தேர்வு


வாணியம்பாடி நகராட்சி தலைவராக  உமா சிவாஜி கணேசன் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 5 March 2022 1:15 AM IST (Updated: 5 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி நகராட்சி தலைவராக உமாசிவாஜிகணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சி தலைவராக உமாசிவாஜிகணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாணியம்பாடி நகராட்சி 1-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமா சிவாஜி கணேசன் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அந்த கட்சியின் தலைமை அறிவித்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்டாலின் பாபு முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் உமா சிவாஜி கணேசன் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நகராட்சியின் 17-வது தலைவராகப் பதவி ஏற்றார்.

இதே போல் 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் அப்துல்லா துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நகர மன்றத் தலைவர் உமா சிவாஜி கணேசன் பேசுகையில், ‘‘வாணியம்பாடி நகரம் தமிழ்நாட்டிலேயே சிறந்த நகரமாக மாற்றப்படும்’’ என்றார்.

இதனை தொடர்ந்து அவருக்கு அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், 125 ஆண்டு கால வாணியம்பாடி நகர மன்ற வரலாற்றில் முதன்முறையாக இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story