தங்க பதக்கங்களை வென்று மாணவர்கள் சாதனை


தங்க பதக்கங்களை வென்று மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 5 March 2022 1:21 AM IST (Updated: 5 March 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்க பதக்கங்களை வென்று மாணவர்கள் சாதனை படைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலசலிங்கம் பல்கலை கழக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சர்மிளா, ஜெய்ஷா, நர்மதா, கீர்த்திகா, நவீன் சதீஷ் கனி, நிதீஷ் கார்த்திகேயன், நந்து விக்ரம், ஜெயசூர்யா, ஜெயந்த் ஆகியோர்  நீச்சல் போட்டியில் 9 தங்கப்பதக்கங்களை வென்றனர். மேலும் 9  வெள்ளிப்பதக்கங்களையும்,  5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் பெற்றனர். நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்று குவித்த மாணவ-மாணவிகளை பல்கலைகழக துணை தலைவர் சசி ஆனந்த், உடற்பயிற்சி இயக்குனர் செல்வகணேஷ், நீச்சல் பயிற்சியாளர் உதயகுமார், துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர். 
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்க பதக்கங்களை வென்று மாணவர்கள் சாதனை படைத்தனர். 

Next Story