நகராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்வு


நகராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்வு
x
தினத்தந்தி 5 March 2022 1:24 AM IST (Updated: 5 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். 
அருப்புக்கோட்டை 
 அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. உறுப்பினர் ராமதிலகவதி தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சுந்தரலட்சுமி போட்டியின்றி நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரன் அறிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத்தலைவர் சுந்தரலட்சுமியின் கணவர் சிவப்பிரகாசம் தொடர்ந்து 10 ஆண்டுகள் நகர்மன்ற தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு
அதனைத்தொடர்ந்து நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அருப்புக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தி.மு.க. சார்பில் பழனிசாமி என்பவர் நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 
வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் பழனிசாமி நகர்மன்ற துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரன் அறிவித்தார்.அதனைத்தொடர்ந்து நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு  வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பாஸ்கரன் வழங்கினார்.
மேலும் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் இருவரும் முறையாக பதவியேற்றுக்கொண்டனர். விழாவில்  முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், நகர செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். 


Next Story