ராஜபாளையத்தில் அதிகாரிகள் ஆய்வு
ராஜபாளையத்தில் 200 ஆடுகள் இறந்ததின் எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராஜபாளையம்.
ராஜபாளையத்தில் 200 ஆடுகள் இறந்ததின் எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
200 ஆடுகள் சாவு
ராஜபாளையம் அருகே பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான 200 ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்த போது, ஆங்காங்கே மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தது. மேலும் 50 ஆடுகள் நோய் தொற்று காரணமாக உயிர் இழக்கும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி, விருதுநகர் மாவட்ட கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு உதவி இயக்குனர் ரமேஷ் தலைமையில் ஜமீன் கொல்லங் கொண்டான், நல்லமங்கலம், எஸ். ராமலிங்கபுரம், சொக்கநாதன் புத்தூர் பகுதிகளின் கால்நடை உதவி மருத்துவர்கள் முகாம் இ்ட்டனர்.
கால்நடை வளர்ப்போரிடம் நிலைமையை கேட்டறிந்த மருத்துவர்கள், இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்.
நோய் எதிர்ப்பு மருந்து
நோய் தாக்கி இறந்த ஆடுகளின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள கால்நடை துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இறந்து கிடந்த ஆடுகளின் உடல்கள் சேகரிக்கப்பட்டது. அவை அனைத்தும் தனியார் இடத்தில் வருவாய்துறையினர் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மூடப்பட்டது.
பின்னர் அப்பகுதியில் உள்ள 200 ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து, நோய் எதிர்ப்பு மருந்து, ஊட்டச்சத்து மருந்து மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் மருந்துகள் செலுத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆடுகள் பரிசோதிக்கப்பட்டு, மேலும் உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்க நோய் தடுப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story