நகரசபை தலைவர், துணை தலைவர் பதவி ஏற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை தலைவர், துணைத்தலைவர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தங்கம் ரவி கண்ணன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்று 28 இடங்களை கைப்பற்றியது. 5-வது வார்டில் வெற்றி பெற்ற தங்கம் ரவி கண்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நகர மன்ற ஆணையாளர் மல்லிகா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணைத்தலைவராக செல்வமணி பதவி ஏற்றார். தலைவராக பதவியேற்ற தங்கம் ரவி கண்ணனுக்கு தொழிலதிபர்கள் பயில்வான் கிருஷ்ணசாமி, ராஜா முனியசாமி, தங்கம்கோடீஸ்வரன், அரவிந்த், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் குருசாமி, ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகம், ஒப்பந்தக்காரர்கள் குழந்தைவேலு, மணிகண்டன், கற்பக வேல், ஜெயகண்ணன் சந்தனகுமார், தேசியப்பன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story