மாசி மகா ஊர்வலம்


மாசி மகா ஊர்வலம்
x
தினத்தந்தி 5 March 2022 1:44 AM IST (Updated: 5 March 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

அம்பை அருகே மாசி மகா ஊர்வலம் நடந்தது.

அம்பை:

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதியில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ந் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று மாசி மகா ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மகா ஊர்வலம் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது. அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி முன்நின்று முறை நடத்தி மேற்கு நோக்கி வாகைபதி சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கு முன்பு சிறுவர் சிறுமிகளின் கோலாட்டமும், இளைஞர்களின் செண்டை மேளமும்  நடைபெற்றது. அய்யா வழி பக்தர்கள் ஒவ்வொரு வாகனத்தையும் தோளில் சுமந்தவாறு சென்றனர். 

இந்த ஊர்வலமானது வாகைபதி வந்தடைந்ததும் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த பக்தர்கள் சிறப்பு பணிவிடைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பதிகளுக்கும் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அய்யாவழி அன்பு கொடிமக்களும் சுற்றுவட்டார அன்பு கொடிமக்களும் செய்திருந்தனர்.

Next Story