சாத்தூர் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியேற்பு


சாத்தூர் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியேற்பு
x
தினத்தந்தி 5 March 2022 1:49 AM IST (Updated: 5 March 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியேற்று கொண்டனர்.

சாத்தூர், 
சாத்தூர் நகரசபை தலைவரை தேர்ந்தெடுக்க நேற்று காலை முதலே சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்த நிலையில் காலை 10 மணிக்கு நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலையில் நகர்மன்ற தலைவருக்கு போட்டியிட வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில்  தி.மு.க.வை சேர்ந்த குருசாமி மட்டும் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து குருசாமி நகரசபை தலைவராகவும், துணை தலைவராக அசோக்கும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


Next Story