அரசு பஸ் மோதி சரக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பலி
திருப்பனந்தாள் அருகே அரசு பஸ்மோதி சரக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருப்பனந்தாள்;
திருப்பனந்தாள் அருகே அரசு பஸ்மோதி சரக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
அரசு பஸ் மோதியது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நக்கம்பாடி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 40.) இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பர்னிச்சர் நிறுவனத்தில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை சங்கர் சரக்கு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சோழபுரம் அருகே மேலவெளி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவருடன் கிளீனர் மேலக்காவேரி பகுதியை சேர்ந்த தீரன் (35) உடன் சென்றார். மேலவெளி பகுதியில் அவர்கள் சரக்கு ஆட்டோவில் சென்ற போது கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது மோதியது.
2 பேர் பலி
இதில் டிரைவர் சங்கர், மற்றும் கிளீனர் தீரன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பனந்தாள் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சங்கர், தீரன் ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story