அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் நகராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாந்தி கலைவாணன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணி அளவில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதியம் 3 மணிக்கு தேர்தல் அதிகாரி சித்ரா சோனியா நகராட்சி கூட்ட மன்றத்திற்கு வந்து, அங்கிருந்த கவுன்சிலர்கள் எண்ணிக்கையை சரிபார்த்தார். அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த 7 கவுன்சிலர்களும், ஒரு சுயேச்சை கவுன்சிலரும் வந்திருந்தனர். தி.மு.க. கவுன்சிலர்கள், 3 சுயேச்சை கவுன்சிலர்கள் வரவில்லை. தேர்தல் நடத்துவதற்கு குறைந்தது 10 கவுன்சிலர்களாவது இருக்க வேண்டும் என்ற நிலையில், அங்கு மொத்தம் 8 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்ததாலும், தேர்தல் நடத்துவதற்கான நேரம் முடிந்ததாலும், துணைத்தலைவர் தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து அங்கிருந்து கவுன்சிலர்கள் சென்றனர்.
Related Tags :
Next Story