2 வீடுகளில் 10 பவுன் நகை- ரூ.26 ஆயிரம் திருட்டு
2 வீடுகளில் 10 பவுன் நகை- ரூ.26 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
தா.பழூர்:
உறவினர் போல் நடித்து...
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் மெயின்ரோடு பகுதியில் ராசாங்கம் (வயது 50) என்பவர், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் அவரது வீட்டிற்கு, உறவினர் என்று கூறி மர்ம நபர் ஒருவர் வந்து தண்ணீர் கேட்டு குடித்துள்ளார். வீட்டில் நடைபெற்ற விசேஷங்களுக்கு வர முடியாததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். பின்னர் அவர் வீட்டின் தோட்டத்தில் இருக்கும் சில மூலிகைகளின் பெயர்களை சொல்லி அவற்றை, தனக்கு சிறிது பறித்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து ராசாங்கம் தோட்டத்திற்கு சென்று அவர் கேட்ட மூலிகைகளைப் பறித்து வருவதற்குள் வீட்டில் இருந்த மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் சந்தேகம் அடைந்த ராசாங்கம் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10.5 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது.
திருட்டு
இதேபோல் காரைக்குறிச்சி பட்டத்தெருவில் கண்ணாயிரம்(30) என்பவரது வீட்டில் ரூ.26 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை மற்றும் திருட்டு போன சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story