5-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
5-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருேக மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 5-வது நாளாக ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
மாணவி தற்கொலை
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி லாவண்யா கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது விடுதி வார்டன் ஜாமீனில் வெளிேய வந்து உள்ளார்.
சி.பி.ஐ. விசாரணை
இந்தநிலையில் மாணவியின் தந்தை அரியலூர் வடுகர்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் தனது மகள் லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்புக்கு மாற்றவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில். மதுரை ஐகோர்ட்டு கிளை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முறையிட்டது. சுப்ரீம் கோாட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
5-வது நாளாக ஆய்வு
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி முதல் சி.பி.ஐ. அதிகாரி சந்தோஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் மைக்கேல்பட்டி பள்ளி விடுதியில் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று 5-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் குழு மைக்கேல்பட்டி பள்ளி விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். போலீஸ் காரில் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விடுதிக்குள் சென்றதும் கதவுகள் மூடப்பட்டு ஆய்வு நடைபெற்றது. நேற்று 5-வது நாளாக காலை 10.30 மணியளவில் விடுதிக்குள் சென்ற அதிகாரிகள் இரவு 8.10 மணிக்கு காரில் ஏறி சென்றனர்.
Related Tags :
Next Story