தூக்கில் காதல் ஜோடி பிணம்


தூக்கில் காதல் ஜோடி பிணம்
x
தினத்தந்தி 5 March 2022 2:28 AM IST (Updated: 5 March 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

காதல் ஜோடி தூக்கில் பிணமாக ெதாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவந்தான், 
காதல் ஜோடி தூக்கில் பிணமாக ெதாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கில் பிணம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு பிரிவு மலைக்காலனி தோட்டத்து பகுதியை சேர்ந்தவர், லோகபிரபு (வயது27). இவரது வீட்டில் இவரும்,  துவரிமான் காலனியைச் சேர்ந்த துர்காதேவி(25) என்ற பெண்ணும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த காடுபட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ், ஏட்டு பாபுகாந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று லோகபிரபு, துர்காதேவி ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
லோகபிரபுவும்,  துர்காதேவியும் மதுரை தனியார் கல்லூரியில் படித்தது முதல் காதலித்து வந்ததாகவும், தற்போது வேலைதேடி வருவதாகவும், வீட்டுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. இந்த திருமணத்துக்கு அவர்களது குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது அவர்களது சாவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்்தியது.

Next Story