அரூர் பேரூராட்சி தலைவராக மனைவியும், துணைத்தலைவராக கணவரும் தேர்வு
அரூர் பேரூராட்சி தலைவராக மனைவியும், துணைத்தலைவராக கணவரும் ேதர்வு செய்யப்பட்டனர்.
அரூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், பா.ம.க. மற்றும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. கடும் போட்டி நடந்தது. நேற்று நடந்த மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் நிவேதா 6 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளார்.
பின்னர் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்ற இந்திராணியின் கணவர் தனபால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கணவன்- மனைவி இருவருக்கும் தேர்தல் அலுவலர் கலைராணி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தனபால் ஏற்கனவே பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, கடத்தூர், காரிமங்கலம் ஆகிய 7 பேரூராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அரூர், கம்பை நல்லூர், பொ.மல்லா புரத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.
Related Tags :
Next Story