குடும்பத் தகராறில் விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை முயற்சி


குடும்பத் தகராறில் விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 5 March 2022 8:11 AM IST (Updated: 5 March 2022 8:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கே.கே.நகரில் குடும்பத் தகராறில் விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை முயன்றார்.

சென்னை, 

சென்னை கே.கே.நகர் அருணாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் லோகித் சாய். இவருடைய மனைவி ராயலட்சுமி (வயது 27). இவர், கொளத்தூர் பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ராயலட்சுமி கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் மாலை ராயலட்சுமி படுக்கையறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ரோகித் சாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ராயலட்சுமி மயக்க நிலையில் கிடந்தார். அவர் அருகில் மாரடைப்பை ஏற்படுத்தும் விஷ ஊசி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த லோகித் சாய், மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story