திருவேற்காடு நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு


திருவேற்காடு நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 5 March 2022 8:36 AM IST (Updated: 5 March 2022 8:36 AM IST)
t-max-icont-min-icon

திருவேற்காடு நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,  

திருவேற்காடு நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க.-11, காங்கிரஸ்-1, சுயேச்சைகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்றனர். நேற்று நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ரமேஷ் தலைமையில் நடந்த நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருவேற்காடு நகராட்சி துணைத்தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி துணை தலைவராக காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஆனந்தி ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Next Story