மீஞ்சூர் பேரூராட்சி் தலைவராக தி.மு.க. போட்டி வேட்பாளர் வெற்றி
மீஞ்சூர் பேரூராட்சி் தலைவராக தி.மு.க. போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நேற்று காலை பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளராக சுமதியும் அவரை எதிர்த்து தி.மு.க.வை சார்ந்த ருக்மணிமோகன்ராஜ் என்பவரும் போட்டியிட்டனர். தேர்தல் நடந்து ஓட்டுகள் எண்ணும் போது தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளர் 9 ஓட்டுகளும் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 9 ஓட்டுகளும் பெற்ற நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்த சிவப்பு மையை பயன்படுத்தாமல் நீல மையை பயன்படுத்திய சுமதியின் ஒரு ஓட்டு செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிஅரசு அறிவித்தார். இதனால் போட்டி வேட்பாளர் ருக்மணிமோகன்ராஜ் மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவான நிலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று மாலை நடந்த துணைத்தலைவர் தேர்தலில் போதிய உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிஅரசு அறிவித்தார்.
Related Tags :
Next Story