பொன்னேரி, திருவள்ளூர், திருநின்றவூர், திருத்தணி நகராட்சி தலைவர் பதவிகளை பெண்கள் கைப்பற்றினர்
பொன்னேரி, திருவள்ளூர், திருநின்றவூர், திருத்தணி நகராட்சி தலைவர் பதவிகளை பெண்கள் கைப்பற்றினர்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், அ,தி.மு.க. வை சேர்ந்த சரண்யா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் பரிமளம் விசுவநாதன் 18 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலா கதிரவன் 12 ஓட்டுகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் 15 ஓட்டுகளும் பெற்றனர். பொன்னேரி நகராட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சார்ந்த வக்கீல் விஜயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் நகராட்சி தலைவர் பதவிக்கு 2-வது வார்டு உறுப்பினர் உதயமலர் பொன்.பாண்டியன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிடாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக வெற்றி பெற்றதாக திருவள்ளூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) நாகூர் மீரான் ஒலி அறிவித்தார்.
துணைத்தலைவர் பதவிக்கு 27-வது வார்டு உறுப்பினரும், தி.மு.க.வின் திருவள்ளூர் நகர செயலாளருமான ரவிச்சந்திரன், சுயேச்சை வேட்பாளரான 7-வது வார்டு உறுப்பினர் பிரபு இருவரும் போட்டியிட்டனர். இதில் ரவிச்சந்திரன் 20 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான பிரபு 7 ஓட்டுகளை பெற்றார்.
திருநின்றவூர்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சி தலைவராக 1-வது வார்டு உறுப்பினராக தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உஷாராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோன்று 13-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.சரளா போட்டியின்றி திருநின்றவூர் நகராட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
திருத்தணி
திருத்தணி நகராட்சி தலைவராக், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதியின் மனைவி சரஸ்வதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவிக்கு 20-வது வார்டு கவுன்சிலர் சாமிராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story