புகையிலை பொருட்கள் விற்ற 4 பேருக்கு ரூ20 ஆயிரம் அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேருக்கு ரூ20 ஆயிரம் அபராதம்
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமண அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சேவூர் சுற்று வட்டாரப்பகுதியில் சாலையோர உணவகங்கள், பேக்கரிகள் மறறும் பெட்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உணவகங்களில் தரமான உணவு பொருட்கள் கொண்டு சமைத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுகிறதா பேக்கரிகளில் விற்கப்படும் டீ தூள் கலப்படம் உள்ளதா என்ற வகையிலும் புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வில் புகையிலைப் பொருட்கள் இரண்டு பெட்டி கடைகளிலும், ஒரு செல்போன் சர்வீஸ் கடையிலும் மற்றும் ஒருவரது வீட்டிலும் விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது. அதன்படி புகையிலை பொருட்கள் சுமார் 21 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ததின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும்.
இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் எனவும் குட்கா பான்மசாலா விற்பனை, பதுக்கி வைத்தல் தொடர்பாகவும், உணவு பொருட்கள் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மற்றும் போன் மூலமாகவும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத்துறை கேட்டுக்கொள்கிறது.
Related Tags :
Next Story