ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், மனைவி, மகளை தாக்கி நகை பறித்த 4 கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பு
ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர், மனைவி, மகளை தாக்கி நகை கொள்ளையடித்த வழக்கில் கைதான 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 24 மணி நேரத்தில் அவர்களை ைகது செய்த போலீசாரை சூப்பிரண்டு பாராட்டினார்.
திருப்பத்தூர்
ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர், மனைவி, மகளை தாக்கி நகை கொள்ளையடித்த வழக்கில் கைதான 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 24 மணி நேரத்தில் அவர்களை ைகது செய்த போலீசாரை சூப்பிரண்டு பாராட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரியை அடுத்த கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 75). ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவருடைய மனைவி சரோஜா (70). மகள் கல்யாணிக்கு (45) கிருஷ்ணகிரி மாவட்டம் மதனுர்பட்டி பள்ளியை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இவர் சிங்காரப்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கல்யாணி தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.
கடந்த 3-ந்் தேதி இரவு 12 மணி அளவில் வந்த 4 மர்ம நபர்கள் குப்புசாமியிடம் பணம் கேட்டு மிரட்டினர். மறுத்த குப்புசாமியை மார்பில் அவர்கள் கத்தியால் குத்தினர். தடுக்க முயன்ற மனைவி சரோஜா மற்றும் மகள் கல்யாணியையும் அவர்கள குத்தி விட்டு இருவரும் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குப்புசாமி மற்றும் அவரது மனைவி, மகளை கத்தியால் குத்திவிட்டு நகையை கொள்ளையடித்து ஓடியவர்கள் திருப்பத்தூர் பகுதியிலுள்ள திருமால் நகர் ஏரி கோடி பகுதியில் வசிக்கும் ராஜி மகன் முருகன் (42), ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் பங்கியான் வட்டம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் (45) இவரது மகன் அரவிந்த் குமார்,(22), ஏலகிரி கிராமம் பெரியான் வட்டம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீகாந்த் என்கிற சேட்டு (20) என்பது தெரியவந்தது. இவர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைதான 4 பேரையும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு பிறப்பித்தார்.
அதற்கான ஆணையை சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரிடமும் போலீசார் வழங்கினர். கொள்ளைர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டினார்.
==========
Related Tags :
Next Story