உலக நுகர்வோர் தினவிழா
தூத்துக்குடியில் உலக நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் எம்பவர் இந்தியா - நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவம் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் தின விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அ.ச.அபுல்காசிம் முன்னிலை வகித்தார். முன்னதாக எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் வரவேற்றார்.
விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து நுகர்வோர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story