மாடு விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள்
கழிஞ்சூர் பகுதியில் நடந்த காளை விடும் திருவிழாவில் காளைகள் சீறி பாய்ந்து ஓடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
காட்பாடி
கழிஞ்சூர் பகுதியில் நடந்த காளை விடும் திருவிழாவில் காளைகள் சீறி பாய்ந்து ஓடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
காளை விடும் திருவிழா
காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் திரவுபதியப்பான் திருவிழாவை முன்னிட்டு காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு சாலையின் இருபுறமும் மூங்கில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு காளைவிடும் திருவிழாவை வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து 120 காளைகள் கலந்து கொண்டன. திருவிழாவை பார்க்க வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் கழிஞ்சூர் பகுதிக்கு வந்திருந்தனர்.
சாலைகளில் மட்டுமல்லாது வீடுகளின் மொட்டை மாடி, படிகள், கூரை மீதும், கட்டிடங்கள் மேலேயும் நின்று காளைகள் சீறிப்பாய்ந்து செல்வதை ரசித்து ஆரவாரப்படுத்தினர்.
குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.66ஆயிரத்து 666, 2-வது பரிசாக ரூ.55 ஆயிரத்து555, 3-வது பரிசாக ரூ.44 ஆயிரத்து 444 என பல பரிசுகள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன.
சிகிச்சை
மாடுகள் முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story