ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி


ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
x
தினத்தந்தி 5 March 2022 8:07 PM IST (Updated: 5 March 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி

கூடலூர்

கூடலூர் தாலுகா ஓவேலி அருகே சீபுரம் எஸ்டேட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் இன்று மாலை 3 மணிக்கு சிலர் குளித்தனர். அப்போது அங்குள்ள ஆற்றில் ஒருவர் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதை அறிந்த  கூடலூர் தாசில்தார் சித்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் நீரில் முழ்கிய நபரை பொதுமக்களின் உதவியுடன் தேடும் பணி நடந்தது.

அப்போது அவரது உடல் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில், அவர் மச்சி கொல்லி பகுதியை சேர்ந்த சவுகத் மகன் சையது அப்ரீத்(வயது 19) என்பதும், தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்ததும், பள்ளிக்க்கு செல்லாமல் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்க வந்தபோது நீரில் மூழ்கி பலியானதும் தெரிந்தது. இதுகுறித்து நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story