பொக்காபுரம் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள்
ஊட்டி, கூடலூரில் இருந்து பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
ஊட்டி
ஊட்டி, கூடலூரில் இருந்து பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
சிறப்பு பஸ்கள்
மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நீலகிரி மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு வெளியிடங்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அதன்படி ஊட்டியில் இருந்து கல்லட்டி, மசினகுடி வழியாக மாரியம்மன் கோவிலுக்கு 6 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கூடலூரில் இருந்து 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் இந்த சிறப்பு பஸ்கள் 8-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
அனுமதி இல்லை
இதற்கிடையில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக எளிதில் செல்லலாம். இருப்பினும் அபாயகரமான 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது என்பதால் பிற மாவட்ட, வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
இதனால் ஊட்டி அருகே தலைகுந்தா சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டும் கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கூடலூர் வழியாக...
மேலும் வாடகை ஜீப்புகள், வேன், மினி லாரி என 5 வாகனங்களுக்கு அனுமதி உள்ளது. பாதுகாப்பாக இயக்க மலைப்பாதையில் ஒன்று அல்லது 2-வது கியரில் மட்டும் இயக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். அனுமதி இல்லாமல் வரும் வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் அனுமதிக்கப்படாமல், அங்கிருந்து கூடலூர் வழியாக திருப்பி விடப்பட்டது.
Related Tags :
Next Story