என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
திண்டுக்கல் உள்பட 3 மாவட்டங்களை சேர்ந்த என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று தொடங்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் உள்பட 3 மாவட்டங்களை சேர்ந்த என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று தொடங்கியது.
என்.சி.சி. மாணவர்கள்
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதனை கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்தீப்மேனன் தொடங்கி வைத்தார். இதில் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 486 என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், முன்னாள் கமாண்டோ வீரர் ஆதிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.
அப்போது என்.சி.சி. மாணவர்களின் கடமை, பணிகள் குறித்து விளக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 5-வது நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அரசு பணிகளுக்கு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சி, படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து விளக்கினார். மேலும் மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
துப்பாக்கி சுடும் பயிற்சி
இதைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடங்கியது. இதில் ராணுவ வீரர்கள் 13 பேர் கலந்துகொண்டு என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கியால் சுடுவது குறித்து பயிற்சி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒவ்வொரு மாணவரும் தலா 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு அசத்தினர்.
இதில் சுபேதார் மேஜர் ராம்தேவ், சுபேதார் முத்து, என்.சி.சி. அதிகாரிகள் பாண்டீஸ்வரன், பாக்கியராஜ், ராஜசேகர், மைக்கேல் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.

Related Tags :
Next Story