தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய என்ஜினீயர் மீது வழக்கு
தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய என்ஜினீயர் கோவை விமான நிலையத்தில் சிக்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை
தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய என்ஜினீயர் கோவை விமான நிலையத்தில் சிக்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏமன் சென்ற என்ஜினீயர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் தயாநிதி (வயது 35). என்ஜினீயர். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அந்த நிறுவனத்தின் சார்பில் பயிற்சிக்காக ஏமன் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இந்திய அரசு பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏமன் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல தடை விதித்துள்ளது. ஆனாலும் தயாநிதி இந்த தடையை மீறி ஏமன் நாட்டிற்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் துபாய் திரும்பி அவர் விடுமுறையில் சார்ஜாவில் இருந்து விமானம் மூலமாக நேற்று கோவை விமான நிலையம் வந்தார்.
கோவையில் சிக்கினார்
விமான நிலைய அதிகாரிகள் அவரது பயண விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது தயாநிதி இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வேலை நிமித்தம் காரணமாக மட்டுமே ஏமன் சென்றதாக தெரிவித்தார்.
இதைதொடர்ந்து தயாநிதி மீது பாஸ்போர்ட்டு சட்டப்பிரிவு 12(3)-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story