பில்லமநாயக்கன்பட்டியில் 9ந்தேதி ஜல்லிக்கட்டு


பில்லமநாயக்கன்பட்டியில் 9ந்தேதி ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 5 March 2022 9:49 PM IST (Updated: 5 March 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

பில்லமநாயக்கன்பட்டியில் 9-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி கேலரி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வடமதுரை:
வடமதுரை அருகே பில்லமநாயக்கன்பட்டியில் பிரசித்திபெற்ற கதிர்நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில் கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் கோவிலில் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும் திருவிழாவையொட்டி வருகிற 9-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு கேலரி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்து, விழாக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கினர்.

Next Story