தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தொடக்க கூட்டுறவு வங்கிபணியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
சோளிங்கர்
தொடக்க கூட்டுறவு வங்கிபணியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு அரசு கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் சங்கங்களுக்கு வரவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள 17 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், ஒரு சில இடங்களில் தரமற்ற பொருட்களுக்கு விற்பனையாளர்கள் பொறுப்பாகி சில மாவட்டங்களில் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 4,500-க்கும் மேற்பட்ேடார் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்ஈடுபட உள்ளனர்.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சநாளை முதல் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story