3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. மேலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் நேற்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி கிடந்தது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், பருவநிலை மாற்றம் காரணமாக இந்த மார்ச் மாதத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடல்சீற்றம் காரணமாக கடந்த 3 நாட்களாக வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
-
Related Tags :
Next Story