உளுந்தூர்பேட்டை அருகே கார்கள் மோதல் 7 பேர் படுகாயம்


உளுந்தூர்பேட்டை அருகே  கார்கள் மோதல் 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 March 2022 10:45 PM IST (Updated: 5 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே கார்கள் மோதல் 7 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை

திருச்சி மாவட்டம் அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்(வயது 34). புரோகிதரான இவர் தனக்கு சொந்தமான காரில் சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் வந்த மற்றொரு கார் நீலகண்டன் ஓட்டி வந்த கார் மீது அதி வேகமாக மோதியது. இதில் நீலகண்டன் மற்றும் பின்னால் வந்து மோதிய காரில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி(37), அவரது மனைவி ஆனந்த பூரணி(34) உள்பட 7 பேர் காயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து நீலகண்டன் கொடுத்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story