கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் விதிமீறல் தேர்தல் ஆணையத்துக்கு அ தி மு க கவுன்சிலர் புகார் மனு
கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் விதிமீறல் தேர்தல் ஆணையத்துக்கு அ தி மு க கவுன்சிலர் புகார் மனு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 11-வது வார்டு கவுன்சிலர் பாபு, மாவட்ட கலெக்டர், தேர்தல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் அ.தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தேன். இதற்கான மறைமுக தேர்தல் வாக்கெடுப்பின்போது 11,12,16,18,19 ஆகிய 5 வார்டுகளின் கவுன்சிலர்கள் மறைமுகமாக வாக்குகளை பதிவு செய்தனர். ஆனால் மீதமுள்ள 16 கவுன்சிலர்களும் தங்களது வாக்குகளை வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் அறியும்படி வெளியில் காட்டிவிட்டு வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதேபோல் பெண் கவுன்சிலர்கள் 3 பேரின் வாக்குச்சீட்டுகளை மற்றொரு கவுன்சிலர் வாங்கி டிக் செய்து வாக்குகளை பதிவு செய்துள்ளார். எனவே நகர மன்றத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் என்பது விதிமுறைக்கு மாறாக நடைபெற்றுள்ளது. எனவே தேர்தல் நடந்த அறையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகரசபை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story