உளுந்தூர்பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அடி உதை வாலிபர் கைது


உளுந்தூர்பேட்டை அருகே  கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அடி உதை வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 March 2022 10:56 PM IST (Updated: 5 March 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அடி உதை வாலிபர் கைது


உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோகிலா. உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மூலமாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பகுதியை சேர்ந்த விஜயகுமார்(வயது 36) என்பவரது மனைவி அருணா உள்பட 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். 

வாங்கிய கடனை வெகு நாட்களாகியும் திரும்ப செலுத்தாததால் அச்சமடைந்த கோகிலா தனது உறவினரான செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் சென்று விஜயகுமாரிடம் வாங்கிய கடனை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் அவர்கள் இருவரையும் ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். அதேபோல் விஜயகுமார் மனைவி அருணா கொடுத்த புகாரின் பேரில் அய்யப்பன் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story