கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்


கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 5 March 2022 11:06 PM IST (Updated: 5 March 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

கிருஷ்ணகிரி:
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 2-ந் தேதி மயான கொள்ளை நிகழ்ச்சியும், 3-ந் தேதி மாலை அம்மனுக்கு ஊஞ்சள் உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தீ மிதி விழா நடந்தது. 
இதில், மயானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவரை சுமந்து வந்த பூசாரிகள், குண்டத்தில் இறங்கினர். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். மேலும் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கல்யாணம் 
இந்தநிலையில் நேற்று அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க அம்மையப்பனுடன் மாலை மாற்றி திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசைகளுடன் கலந்து கொண்டு, அம்மனுக்கு மொய் எழுதினார்கள்.
திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு புடவை மற்றும் மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலை 5 மணிக்கு அம்மையப்பன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.

Next Story